என்னைக்கும் விடாமுயற்சி…
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனினும் தமிழ்நாட்டில் எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிகளுக்கு சில ஆண்டுகளாக அனுமதி இல்லை. இதனால் பெரிய நடிகர்களின் ரசிகர்களின் மனதிற்குள் நீண்ட நாள் சோகம் ஒன்று நிலைக்கொண்டு வருகிறது.

சிறப்பு காட்சிக்கு அனுமதி
இந்த நிலையில் நாளை வெளியாகவுள்ள “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது நாளை (06.02.2025) மட்டும் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிடுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.