அதிரடி ஹிட்
2006 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசனின் அதிரிபுதிரியான நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”. இத்திரைப்படம் கமல்ஹாசனின் கெரியரில் மிக முக்கியமான அதிரடி ஹிட் திரைப்படமாக அமைந்தது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கமலினி முகர்ஜி, ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகை
“வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரமான ஆரோக்கிய ராஜ் என்ற கதாபாத்திரத்திற்கு ராணி என்ற பெயரில் ஒரு மகள் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது. இந்த ராணி கதாபாத்திரத்தை இத்திரைப்படத்தின் துவக்கத்திலேயே கொலை செய்துவிடுவார்கள்.
இந்த ராணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் பெயர் பிதுசி தேஷ் பர்டே. இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். மும்பையில் தனது கணவர் கேதர் பர்டேயுடன் வசித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரை யாராவது கொலை செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

யூட்யூப் தளத்தில் “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை கொண்ட ஒரு வீடியோவின் கீழ் ஒருவர் பிதுசியின் மரணம் குறித்தான செய்தியை கமெண்ட் செய்திருந்த நிலையில் தற்போது இணையத்தில் அதன் Screenshot வைரல் ஆகி வருகிறது.
