விடுதலை 2
“விடுதலை பார்ட் 1” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து “விடுதலை பார்ட் 2” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் சூரியை சுற்றி கதை நகரும். ஆனால் இந்த பாகத்தில் வாத்தியார் கதாபாத்திரமான விஜய் சேதுபதியை சுற்றி கதை நகரும் என கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ
நாளை இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு ஸ்டூடியோவில் இருந்து எழுந்து வருகிறார். எழுந்து வந்து கேமராவை பார்த்து நம்மிடம் பேசும் வெற்றிமாறன், “இப்போதுதான் விடுதலை பார்ட் 2 வேலைகள் முடிவடைந்தது. கடைசி நேரத்தில் படத்தின் 8 நிமிடங்களை குறைத்துள்ளோம். இப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் இத்திரைப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மற்றபடி படம் எப்படி இருக்கும் என்பதை மக்கள்தான் கூறவேண்டும்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக, ரசிகர்கள் பலரும், “நாளைக்கு படம் ரிலீஸ், ஆனா இப்போதான் வேலையையே முடிக்கிறார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sources say…#Viduthalai2 movie final duration 2 hours 45 mns. pic.twitter.com/M3yNYWCfOb
— Valaipechu J Bismi (@jbismi_offl) December 19, 2024