வெற்றி இயக்குனர்
வெற்றிமாறன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக வெற்றிமாறன் வலம் வருகிறார். “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்க உள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் வெற்றிமாறன் கைக்கோர்க்கவுள்ளார்.

வெற்றிமாறனின் ரீமேக் படம்

இந்த நிலையில் வெற்றிமாறன் ஒரு மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கை தயாரிக்கப் போகிறாராம். மலையாளத்தில் “ஆழப்புழா ஜிம்கானா” என்று ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் பிரேமலு புகழ் நஸ்லன் கஃபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வெற்றிமாறன் வாங்கிப்போகிறாராம். இத்திரைப்படத்தை தயாரிக்கும் வெற்றிமாறன், கருணாஸின் மகனான கென் கருணாஸை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளாராம். கென் கருணாஸ் “விடுதலை 2” திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.