நீண்ட நாள் படமாக்கும் இயக்குனர்
தமிழ் சினிமாவில் மிக அதிக நாள் படப்பிடிப்பு நடத்தும் இயக்குனராக பிரபலமாகியுள்ளார் வெற்றிமாறன். “விடுதலை” திரைப்படத்தை ஒரு வருடத்திற்கும் மேல் படமாக்கினார் அவர். “விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கப்போகிறார் வெற்றிமாறன்.

8 மாதத்தில் Finish?

இந்த நிலையில் வெற்றிமாறன் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதே போல் இத்திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளதாம். ஆதலால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்பதில் வெற்றிமாறன் தீர்மானமாக இருக்கிறாராம். அதற்கான பணிகளும் விறுவிறுவென நடந்து வருவதாக கூறப்படுகிறது.