இயக்குனர் வெற்றிமாறன்:
மிகச் சிறந்த படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முத்தான வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் வெற்றி மாறன்.அவரது இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றாலே ஒட்டு மொத்த திரை விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தில் இருந்து விடுதலை படம் வரை அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் தான். சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை.
விடுதலை திரைப்படம்:
இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி மற்றொரு முக்கிய கேரக்டரிலும் நடித்திருப்பார். முதல் பாகமான விடுதலை படத்திற்கு ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்தது.

அடுத்து இரண்டாம் பாகம் தயாராகி வந்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் அதே டீம் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் நேற்று சென்னையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது அப்போது மேடையில் பேசிய வெற்றிமாறன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு நல்ல படம் எடுப்பதற்கு பெரும் உழைப்பு தேவை .
விஜய் சேதுபதி வாத்தியார் இல்லை….
அதை என் பட குழுவினர் விடுதலை படத்திற்காக சிறப்பான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 257 நாட்கள் நடைபெற்றது.அதில் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட 120 நாட்கள் நடித்துள்ளார்.

ஒரு படம் நன்றாக வருவதற்கு பட குழு தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள் . இந்த படம் முடியும்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டு செல்வீர்கள் . இதில் வாத்தியார் என்பது விஜய்சேதுபதியோ….நானோ இல்லை. வாத்தியார் என்பது விடுதலை தான் என அவர் கூறியுள்ளார்.