மங்காத்தா
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து “மங்காத்தா பார்ட் 2” திரைப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். எனினும் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் கவலையோடு இருக்கின்றனர்.

மீண்டும் வெங்கட் பிரபு
இந்த நிலையில் அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க பெரிதும் ஆசைப்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. “விடாமுயற்சி”,”குட் பேட் அக்லி” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்படத்தை இயக்க வெங்கட் பிரபு முயற்சி செய்து வருகிறாராம்.

அஜித்குமார் “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துவிட்டார். இன்னும் சில தினங்களில் கார் ரேஸிற்காக துபாய் செல்ல உள்ளாராம் அஜித். அடுத்த வருடம் அக்டோபர் மாதம்தான் சென்னை திரும்புவதாக உள்ளாராம். அவர் சென்னை திரும்பியவுடன் அஜித்குமாரை நேரில் சந்தித்து தனது அடுத்த படத்திற்காக அப்ரோச் செய்துவிட வேண்டும் என வெங்கட் பிரபு முடிவெடுத்துள்ளாராம்.