தமிழ் மண்ணின் வீரத்தலைவன்
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டு வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தமிழ் மண்ணின் வீரத்தை பறைசாற்றும் திரைப்படமாக அமைந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கட்டபொம்மனின் மிடுக்கை நமது கண் முன்னே கொண்டு வந்திருந்தார். சிவாஜி கணேசன் பேசும் வீர வசனங்களும், அவர் திரையில் நடந்து வரும் கம்பீர நடையும் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிப்பெருக்கை ஏற்படுத்தின.

“கிஸ்தி, திறை, வரி, வட்டி” என சிவாஜி கணேசன் பேசும் வசனம் இப்போதும் மிகப் பிரபலமான வசனம் ஆகும். 1959 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தற்போது உலக திரை விழாவில் திரையிடப்படவுள்ளது. ஆம்!
ரோட்டர்டாம் விழா
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில், “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தின் மெறுகேற்றப்பட்ட பதிப்பு திரையிடப்பட உள்ளது. இந்த செய்தியை NFDC (National Film Development Corporation) உறுதிப்படுத்தியுள்ளது.
