முதலில் வரும் பார்ட் 2
சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் வருகிற 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் திரைப்படம் “வீர தீர சூரன் பார்ட் 2”. இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டபோதே பார்ட் 2 முதலில் வெளிவருவது விநோதமாக பார்க்கப்பட்டது. “பார்ட் 1 தானே முதலில் வருவது வழக்கம், இது என்ன பார்ட் 2 முதலில் வருகிறது” என்று ஆச்சரியப்பட்டனர் ரசிகர்கள். இந்த நிலையில் 27 ஆம் தேதி வெளிவரவுள்ள “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தில் இயக்குனர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறாராம்.

பார்ட் 3க்கான முன்னோட்டம்
அதாவது “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் “பார்ட் 3”க்கான முன்னோட்டத்தை வைத்திருக்கிறாராம். ஆனால் “பார்ட் 2”க்கு பிறகு “பார்ட் 1” தான் வெளிவரவுள்ளதாம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.
“வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.