தள்ளிப்போன விக்ரம் படம்…
சீயான் விக்ரம் நடித்த “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் தயாராக இருந்தனர். ஆனால் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர இருந்ததால் “வீர தீர சூரன்” திரைப்படம் தள்ளிப்போனது. ஆனால் “விடாமுயற்சி” திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரவில்லை.

இந்த நிலையில் “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீட்டில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
அப்படி என்ன சிக்கல்…
அதாவது “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லையாம். வருகிற மார்ச் 28 ஆம் தேதிக்குள் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டால் இத்திரைப்படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது.