தடைகளை தாண்டி வெளிவந்த திரைப்படம்
எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பல தடைகளையும் தாண்டி நேற்று மாலை வெளியாகியுள்ளது “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டுள்ளனர். இதில் சீயான் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விக்ரம்க்கு கம்பேக்கா?
இத்திரைப்படத்தின் முதல் காட்சி நேற்று மாலை வெளியான நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் பாஸிட்டிவான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். படம் பார்த்து வெளியில் வந்த ரசிகர் ஒருவர், “விக்ரமிற்கு படத்தில் மாஸ் காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் விக்ரமிடம் இருந்து சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கிறார்கள். இது மாஸ் படம் இல்லை, ஆனால் அவரது நடிப்பிற்கான படம்” என கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் கூறுகையில், “படத்தில் கதை மிகவும் மெதுவாக ஆரம்பிக்கிறது. கதாபாத்திரங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்திய பிறகுதான் கதைக்குள் செல்கிறார்கள். மற்றபடி படம் அருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவான வரவேற்பு கிடைத்து வருகிறது.