பாலிவுட்டை கலக்கும் தென்னிந்திய இயக்குனர்கள்
பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற தமிழ் இயக்குனர்கள் பாலிவுட்டில் பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அவர்கள் பாலிவுட்டின் வெற்றி இயக்குனர்களாக பிரகாசிக்கவில்லை. ஆனால் சமீப காலமாக ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டின் முக்கிய இயக்குனராக உருமாறியுள்ளார். அதனை தொடர்ந்து அட்லீ தற்போது பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார். இயக்குனர் விஷ்ணுவர்தனும் பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் ராம் கோபால் வர்மா, பாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குனராக உருவானார். அதனை தொடர்ந்து “அர்ஜுன் ரெட்டி” இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா ஹிந்தியில் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பாலிவுட்டிற்கு செல்லும் விஜய் பட இயக்குனர்

2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் “வாரிசு”. இத்திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிப்பள்ளி. இவர் தெலுங்கில் மிக முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் பாலிவுட்டில் ஆமிர்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.