நடிகை வாணி போஜன்:
சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் நடிகை வாணி போஜன் சீரியல்களில் நடித்து அதன் பின்னர் திரைத்துறையில் அறிமுகமானார். விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமானார் . அதை தொடர்ந்து ஜெயா டிவி சன் டிவி உள்ளிட்டவற்றில் நடித்திருக்கிறார் .

தெய்வமகள் தொடரில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ஒரு இரவு என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான வாணி போஜனுக்கு ஓ மை கடவுளே திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது .

ஒரு நாள் நிச்சயம்…
அதை தொடர்ந்து லாக்கப் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் அவர் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது அழகழகான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

அந்த வகையில் தற்போது வாணி போஜன் கருப்பு நிறத்தில் செம ஸ்டைலான கோட் சூட் அணிந்து கொண்டு கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் அப்படியே நயன்தாரா மாதிரி இருக்கிறார் என கூறி வருவதோடு நிச்சயம் ஒரு நாள் வாணி போஜன் நயன்தாராவை காட்டிலும் அழகாககவும், சிறந்த நடிகையாகவும் வளர்ந்து இருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.