சீரீயல் டூ சினிமா
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மாயா” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் வாணி போஜன். இவர் சன் தொலைக்காட்சியின் “தெய்வமகள்” தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக ஆனார். இதனிடையே “ஓர் இரவு” என்ற திரைப்படத்தில் நடித்த வாணி போஜன், அதனை தொடர்ந்து “ஓ மை கடவுளே”, “லாக் அப்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் பதிந்துப்போனார். தற்போது “கேங்கர்ஸ்”, “கலகலப்பு 3” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன்.

இந்த வயதிலும் பேச்சுலர்…
வாணி போஜனுக்கு தற்போது 36 வயது ஆகிறது. எனினும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணம் எப்போது என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் வாணி போஜன்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர், “உங்களுக்கு திருமணம் எப்போது?” என கேட்டார். அதற்கு வாணி போஜன் “அய்ய்யோ” என்றார். அப்போது அவரது PRO பின்னால் இருந்து “பெர்சனல் கேள்விகளை கேட்காதீர்கள்” என கூறினார். அதன் பின் பத்திரிக்கையாளர்கள் வேறு கேள்விக்குத் தாவினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://www.instagram.com/reel/DEFqbCUSHQS/?igsh=MWZsbXQ4cWwwYWxibQ%3D%3D