வெளியானது வணங்கான்
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள “வணங்கான்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

முதலில் இத்திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார். ஆனால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட சூர்யா இத்திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின் இத்திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார்.
தொழில்நுட்ப கோளாறு?
“வணங்கான்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் வெளியான பல திரையரங்குகளில் Key Delivery Message (KDM) என்ற தொழில்நுட்ப கோளாறு காரணமாக இத்திரைப்படத்தின் முதல் காட்சி தடைபட்டுவிட்டது. இதனால் ரசிகர்கள் பலருக்கும் இது ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும் மதிய காட்சி முதல் இத்திரைப்படம் திரையிடப்படும் என படக்குழு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.