விடாமுயற்சி ரிசல்ட்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்து பல விமர்சகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வலைப்பேச்சு குழுவினரான அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் ஆகியோர் இத்திரைப்படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ரொம்ப காமெடியா இருக்கு…
“அஜித்தும் திரிஷாவும் இளம் நடிகர்கள் கிடையாது. ஆதலால் படத்தில் இவர்கள் ரொமான்ஸ் செய்வது போல் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் காமெடியாக இருந்தது” என பிஸ்மி கூறினார். அதன் பிறகு பேசிய சக்திவேல், “படத்தில் வருகிறவர்கள் போகிறவர்கள் என எல்லாரும் அஜித்தை அடிக்கிறார்கள். ஆனால் அஜித் அமைதியாகவே இருக்கிறார். இதுதான் வருத்தமாக இருந்தது. நமக்கே அப்படி இருக்கிறது என்றால் படம் பார்த்த அஜித் ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“தன்னுடைய மனைவி இன்னொருவருடன் உறவில் இருக்கிறார் என்பதை அஜித் தெரிந்துகொண்டபின் அவர் கோபப்படாமல் மிகவும் சாதாரணமாக அதனை எடுத்துக்கொள்கிறார். அது எப்படி என்றே நமக்கு புரியவில்லை” என்று அந்தணன் இத்திரைப்படத்தை விமர்சித்தார். இவ்வாறு வலைப்பேச்சு குழுவினர் “விடாமுயற்சி” திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.