கலவையான விமர்சனங்கள்
கடந்த 27 ஆம் தேதி சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களே வந்தவண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தின் மேக்கிங் அருமையாக உள்ளதாகவும் ஆனால் திரைக்கதையில் இயக்குனர் சற்று சறுக்கிவிட்டார் எனவும் விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் வலைப்பேச்சு குழுவினர் இத்திரைப்படத்தை தங்களது ஸ்டைலில் விமர்சித்துள்ளனர்.

ஸ்டார்டிங் நல்லாதான் இருக்கு, ஆனால்?
“படத்தின் ஓப்பனிங் எல்லாம் பார்த்தபோது அடடா, ஒரு சூப்பர் படத்திற்கு வந்து உட்கார்ந்துவிட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அருண்குமாரின் மேக்கிங்கில் ஒரு மலையாளப் படத்தின் சாயல் இருந்தது. மலையாளப் படத்தில்தான் இவ்வளவு யதார்த்தமான காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் வியந்து பேசக்கூடிய பல விஷயம் என்றால் அது இந்த மேக்கிங் ஸ்டைல்தான். ஆனால் அதுவே இத்திரைப்படம் நகர நகர அது பலவீனமாக ஆகிவிட்டது” என வலைப்பேச்சு பிஸ்மி கூற,

அதற்கு வலைப்பேச்சு அந்தணன், “ஆமாம், நகர நகர நகர்வேனா என்கிறது” என்று நகைச்சுவையாக கூறினார். இது மற்றவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.