லேடி சூப்பர்
சமீப காலமாகவே நயன்தாராவை “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தோடுதான் அழைக்கிறார்கள். அவர் நடிக்கும் திரைப்படங்களிலும் இந்த டைட்டில் இடம்பெற்றுவிடுகிறது. எனினும் சமீபத்தில் நயன்தாரா ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “லேடி சூப்பர் ஸ்டார் என்று எனது பெயருக்கு முன் போட வேண்டாம் என பல இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் நான் பல முறை கெஞ்சி கேட்டிருக்கிறேன். நான் அந்த பட்டத்திற்கு என்றும் ஆசைப்பட்டது இல்லை” என கூறினார்.
தைரியம் இருந்தா….

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, “நயன்தாரா அப்பேட்டியில் பேசியது முழுக்க முழுக்க பொய். அவர் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படாதது போல் பேசுகிறார். நயன்தாரா தான் ஒப்பந்தமாகும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களிடம் தன்னுடைய பெயருக்கு முன்னால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் இடம்பெறவேண்டும் என கண்டிஷன் போடுவார். அவரது ஒப்பந்த பத்திரத்திலேயே அது குறிப்பிடப்பட்டிருக்கும். அவருக்கு தைரியம் இருந்தால் அவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்களின் Agreement பத்திரத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட சொல்லுங்கள்” என்று நயன்தாராவுக்கு சவால் விடுத்திருக்கிறார்.
நயன்தாரா சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் மூன்று குரங்குகள் என வலைப்பேச்சு குழுவை கேலி செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.