கெட்ட வார்த்தை பேசிய மிஷ்கின்
சமீப காமலமாக மிஷ்கின் எந்த சினிமா விழாவில் கலந்துகொண்டாலும் சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த “பாட்டல் ராதா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின் இடையே இடையே பல கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். குறிப்பாக அந்த மேடையில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லிங்குசாமி போன்ற இயக்குனர்கள் அமர்ந்திருந்தனர்.

மிஷ்கின் ஒரு சாக்கடை…
இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் பேசியபோது, “மிஷ்கின் ஒரு சாக்கடை. அது நாறத்தான் செய்யும். ஆனால் அந்த மேடையில் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் இவர்கள் எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். இதில் பா.ரஞ்சித் மிஷ்கினுடைய பேச்சை கைத்தட்டி ரசிக்கிறார். வெற்றிமாறன் வாயை பொத்திக்கொண்டு சிரிக்கிறார்.

பாட்டல் ராதா திரைப்படம் மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமையை குறித்த திரைப்படம். ஆனால் மிஷ்கின் குடியை கொண்டாடுவது போல் பேசுகிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “மிஷ்கின் எல்லோரையும் ஒருமையில் பேசுகிறார், ஆனால் உதயநிதியை மட்டும் மரியாதையோடு பேசுகிறார்” என குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.