எதிர்பாராத வெற்றி
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள “மதகஜராஜா” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் 12 வருடங்களாக வெளியாகாமல் கிடப்பில் கிடந்தது. திடீரென “விடாமுயற்சி” திரைப்படம் தள்ளிப்போன நிலையில் “மதகஜராஜா” வெளியீடு அறிவிக்கப்பட்டது. 12 வருடங்களுக்கு முன்பு எடுத்த திரைப்படம் இப்போதும் ரசிக்கும்படியாக அமைந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சந்தானம் அதகளம்!
குறிப்பாக “மதகஜராஜா” திரைப்படத்தில் சந்தானம் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவையாக இருந்தது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மனோபாலா இடம்பெறும் காட்சிகளில் திரையரங்கமே குலுங்கி குலுங்கி சிரிப்பதாக கூறுகின்றனர்.
யோகி பாபு திருந்தட்டும்?

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோ ஒன்றில் பேசியபோது “யோகி பாபுவை 100 முறை மதகஜராஜா திரைப்படத்தை பார்க்கச் சொல்லவேண்டும்” என கூற அந்த வீடியோவில் அதன் பின் பேசத்தொடங்கிய வலைப்பேச்சு பிஸ்மி, “அப்படி பார்த்தாவது ஒரு நல்ல காமெடியனாக மாற முயற்சி எடுப்பாரா?” என்று கூறியுள்ளார்.