தடைகளை தாண்டி வெளிவந்த திரைப்படம்
சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் நேற்று பல தடைகளையும் தாண்டி வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதில் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வீடியோவில் இத்திரைப்படத்தை குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

விக்ரம்கிட்ட இதை எதிர்பார்த்தேன், ஆனால்?
“தில், தூள், சாமி போன்ற திரைப்படங்களின் வரிசையில் நான் வீர தீர சூரன் படத்தை எதிர்பார்த்தேன். ஆனல தில்-ல் தி இருக்கிறது, தூளில் தூ இருக்கிறது, சாமியில் சா இருக்கிறது. மீதம் எதையும் காணவில்லை” என இத்திரைப்படத்தை விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “உள்ளபடியே ஒரு முக்கால் மணி நேரம் எனக்கு மூச்சே வரவில்லை. அடுத்து என நடக்கப்போகிறதோ என சீட்டு நுனியில் ஆர்வமாக அமரவைத்துவிட்டார் இயக்குனர். சீட்டு நுனியில் நகர்ந்து உட்கார்ந்தேன். ஆனால் மெல்ல அப்படியே கீழே உட்காரவைத்துவிட்டனர்” என்று கிண்டல் தொனியில் இத்திரைப்படத்தை அந்தணன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.