மூன்று குரங்குகள்….
சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா ஒரு பிரபலமான யூட்யூப் சேன்னலில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வலைப்பேச்சு யூட்யூப் சேன்னலை நிர்வாகித்து வரும் அந்தணன், பிஸ்மி, சக்தி ஆகியோரை மறைமுகமாக “Three Monkeys” என்று கேலி செய்தார். இதனை தொடர்ந்து நயன்தாரா தங்களை உருவகேலி செய்வதாக வலைப்பேச்சு குழுவினர் பிராது தெரிவித்தனர்.

யார் யாரோ லேடி சூப்பர் ஸ்டார்னு….
இந்த நிலையில் வலைப்பேச்சு குழுவினருக்கு ரசிகர் ஒருவர், “விஜயசாந்திக்கு பிறகு ஏன் ஒரு ஆக்சன் ஹீரோயின் வரவே இல்லை?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அந்தணன், “லேடி சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் வைத்தால் மட்டும் பத்தாது? உழைக்க வேண்டும். விஜயசாந்தி எல்லாம் கயிற்றில் தொங்கி சண்டை போடுவார். அவ்வளவு உழைப்பை கொடுப்பார். அதனால்தான் விஜயசாந்திக்கு இந்த புகழ் இருக்கிறது.

கட்டா குஸ்தி படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆக்சன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவர் தொடர்ந்து இது போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் ஒரிஜினல் லேடி சூப்பர் ஸ்டாராக ஆகியிருக்கலாம். ஆனால் காலம் அவரை அப்படி சிந்திக்கவிடவில்லை என்று நினைக்கிறேன். இப்படி இருக்கையில்தான் யார் யாரோ லேடி சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட்டுக்கொள்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இவ்வாறு நயன்தாராவை சீண்டுவது போல் பேசியுள்ளார் அந்தணன்.