பிசியான நடிகர்
கார்த்தி தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். நலன் குமாரசாமியின் “வா வாத்தியார்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, இதனை தொடர்ந்து “சர்தார் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தியின் புதிய திரைப்படத்தில் வடிவேலு இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

புதிய காம்போ

“டாணாக்காரன்” திரைப்படத்தை இயக்கிய தமிழ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளாராம். அத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, கார்த்தியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கார்த்தியும் வடிவேலுவும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.