படிக்காதவன்
தனுஷ் விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு போன்ற பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து மட்டும் அவர் நடித்ததில்லை என்று பலரும் நினைக்கலாம். ஆனால் “படிக்காதவன்” திரைப்படத்தில் வடிவேலுவும் தனுஷும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

பாதியிலேயே வெளியேறிய வடிவேலு
முதலில் வடிவேலுவும் தனுஷும் இடம்பெற்ற பல காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் தனுஷுடன் வடிவேலுவுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்திலிருந்து வடிவேலு பாதியிலேயே வெளியேற வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.

அதன் பிறகுதான் அந்த காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடித்தார். “அசால்ட் ஆறுமுகம்” கதாபாத்திரத்தில் விவேக் தனது அசரவைக்கும் காமெடிகளின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.