ஒரு வழியா ஆரம்பிச்சிட்டாங்க…
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கூட வெளிவந்திருந்தது. ஆனால் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் பிசியாகி விட்டார்கள். ஆதலால் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூட கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக ஆச்சரியமான புகைப்படம் வெளிவந்தது.

கம்போஸிங் ஆரம்பிச்சாச்சு
அதாவது இத்திரைப்படத்தின் கம்போஸிங் தொடங்கிவிட்டதாக வெற்றிமாறனும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரும் இணைந்து இருப்பது போல் ஒரு புகைப்படம் இன்று காலை வெளிவந்திருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம்தான் தொடங்கும் என கூறப்படுகிறது. சூர்யா “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். அதனை முடித்த பிறகுதான் “வாடிவாசல்” தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.