கங்குவா
சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த “கங்குவா” திரைப்படம் ரசிகர்களை எதிர்பார்த்தளவு ஈர்க்கவில்லை. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்திரைப்படம் சரியாக போகாததால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இத்திரைப்படம் 140 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்ட நிலையில் இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறுகிறார்களாம். இதனால் இன்னும் அதிகமாக இத்திரைப்படத்திற்கு செலவாகும் என தயாரிப்பாளர் கவலையில் இருக்கிறாராம். எனவே “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக கூறப்படுகிறதாம்.
அது மட்டுமல்லாது “வா வாத்தியார்” திரைப்படம் வெளிவந்த பிறகு “கங்குவா” திரைப்படத்திற்காக கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு வந்து நிற்பார்கள் என்ற கூடுதல் கவலையும் தயாரிப்பாளருக்கு இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் தெரிவித்துள்ளார்.