பிளாக்பஸ்டர் ஹிட்
சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆஃபீஸில் சக்கை போடு போட்ட திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. ரகளையான நகைச்சுவை திரைப்படமாக அமைந்த இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரை உச்சத்துக்கு கூட்டிச் சென்றது. டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

விசித்திர தகவல்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வி.சேகர், “நான் பழனி முருகன் கோயில் படிக்கட்டில் வைத்துதான் என்னுடைய பல திரைப்படங்களுக்கு கதை எழுதுவேன். அப்போது பழனியில் இயங்கி வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் பலமுறை சிறப்பு விருந்தினராக பேசியிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பெயர் “வின்னர்” படத்தில் வடிவேலு தலைவராக இருந்த ஒரு சங்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனை தொடர்ந்து “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பெயரில் பழினியில் ஒரு அமைப்பு இயங்கி வருவதாக இதில் இருந்து தெரிய வருகிறது.