உபேந்திரா
கன்னடத்தில் டாப் நடிகராக வலம் வருபவர் உபேந்திரா. தமிழில் ரஜினிகாந்திற்கு எந்தளவுக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கான ரசிகர் பட்டாளம் கன்னடத்தில் உபேந்திராவுக்கு இருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கூலி” திரைப்படத்தில் உபேந்திரா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

UI
இன்று உபேந்திரா நடித்த கன்னட திரைப்படமான “UI” திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் கூட காலை காட்சிக்கே ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் திரைப்படம் தொடங்கப்படும்போது “If you are intelligent, get out of the theatre right now” என்று ஒரு Opening card இடம்பெறுகிறது. இத்திரைப்படத்தை பார்க்கச் சென்ற ரசிகர்கள் இந்த Opening card-ஐ பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் பலரும் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
