UI
கன்னட திரையுலகின் டாப் நடிகராக திகழும் உபேந்திரா நடிப்பில் இன்று உலகமெங்கும் திரைக்கு வந்திருக்கிற திரைப்படம் “UI”. இத்திரைப்படத்தின் தொடக்கத்திலேயே “If you are intelligent, get out of the theatre right now” என்று டைட்டில் கார்டு தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அந்த வகையில் தற்போது இத்திரைப்படத்தின் சென்சார் போர்ட் சான்றிதழிலேயே வித்தியாசமான முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வைரல் வீடியோ
அதாவது இத்திரைப்படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பெயரை குறிப்பிடும் நாமக்குறியீடுடன் அந்த “U” சான்றிதழ் தென்படுகிறது. இந்த வீடியோவை திரையரங்கில் படம் பிடித்த ஒருவர் இணையத்தில் பதிவிட ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகிறது.