2K Kid-கள் கொண்டாடும் திரைப்படம்
இளம் தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் 2K Kidகளின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் ரவி மோகன், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். கிருத்திகா உதயநிதி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. குறிப்பாக “என்னை இழுக்குதடி” பாடல் இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
உதயநிதி சொன்ன விமர்சனம்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, “ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு நான் என்ன கதையை படமாக எடுக்க போகிறேன் என்றே தெரியாது. ஜெயம் ரவி, நித்யா மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் காதலிக்க நேரமில்லை கதைக்கு ஓகே சொன்னதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “உதயநிதிக்கு இத்திரைப்படத்தை திரையிட்டு காட்டினேன். அதற்கு அவர், ‘படம் நன்றாக இருக்கிறது. ஆனால் இது A சென்டர் ரசிகர்களின் திரைப்படம்’ என்று கூறிவிட்டார். என்னால் A சென்டர் திரைப்படங்களைதான் இயக்க முடியும். நான் முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்த பெண்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.