மமிதா பைஜூ
மலையாள சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மமிதா பைஜு. இவர் தமிழில் “ரிபல்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஜய்யின் 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வணங்கான்
பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “வணங்கான்” திரைப்படத்தில் முதலில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் மமிதா பைஜுவை கன்னத்தில் அறைந்ததாகவும் அதனால் மமிதா பைஜு அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் பாலா, இந்த சம்பவம் குறித்த உண்மை தன்மையை பகிர்ந்துள்ளார்.

“பெண் பிள்ளைகளை எப்படி என்னால் அடிக்க முடியும். எனக்கு மேக்கப் போடுவது பிடிக்காது. அது தெரியாமல் நான் ஷாட் ரெடி என்று சொன்னதும் மேக்கப் போட்டுவிட்டு வந்து நின்றாள் அந்த பெண். யார் மேக்கப் போட்டது என்று கன்னத்தில் அறைவது போல் கையை ஓங்கினேனே தவிர அடிக்கவில்லை. ஆனால் நான் அந்த பெண்ணை அடித்துவிட்டதாக செய்தி பரவிவிட்டது” என்று இந்த சம்பவத்தை குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.