டாப் நடிகை
திரிஷா தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான “விடாமுயற்சி” திரைப்படத்தில் கூட அழகு பதுமையாக காட்சியளித்திருந்தார். இந்த 41 வயதிலும் கூட திரிஷா மிகவும் இளமையாக தென்படுகிறார். இந்த நிலையில் திரிஷாவின் சமூக ஊடக கணக்கிற்கு பங்கம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹாக் செய்த மர்ம் நபர்கள்…
அதாவது திரிஷாவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிவித்த திரிஷா, “எனது டிவிட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்கும் வரை அதில் பதிவேற்றப்படும் எந்த பதிவுகளும் எனதல்ல” என கூறியுள்ளார். இச்செய்தி திரிஷாவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
