கும்கியை மறக்க முடியுமா?
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் விஜய் தொலைக்காட்சியில் “கும்கி”, “துப்பாக்கி” போன்ற திரைப்படங்கள் அதிக முறை ஒளிபரப்பான திரைப்படங்கள் ஆகும். அதனையும் தாண்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “கேஜிஎஃப்” திரைப்படம் அதிகளவில் ஒளிபரப்பட்டது. அந்த வகையில் திரிஷா நடித்த ஒரு திரைப்படம் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அதடு…
2005 ஆம் ஆண்டு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “அதடு”. இந்த தெலுங்கு திரைப்படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு சினிமா உலகில் மாபெறும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் “அதடு” திரைப்படம் அதிக முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தெலுங்கு திரைப்படமாக சாதனை படைத்துள்ளன. அதாவது ஸ்டார் மா என்ற தெலுங்கு தொலைக்காட்சியில் இத்திரைப்படம் 1500க்கும் அதிகமான முறை ஒளிபரப்பாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் தமிழில் “நந்து” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.