90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி
90களில் பிறந்தவர்களிடையே மறக்க முடியாத நடிகையான உருவானவர் திரிஷா. “ஜோடி” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனை தொடர்ந்து தனது வசீகர நடிப்பாலும் அழகாலும் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சினார். தற்போது அவருக்கு வயது சற்று ஏறியிருந்தாலும் அவரது அழகு அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் 90ஸ் கிட்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் திரிஷா.

உருக்கமான வீடியோ
இந்த நிலையியோல் ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா, சூர்யா உள்ளிட்ட பலரையும் சந்தித்த திரிஷா உருக்கமான சில புகைப்படங்களையும் வீடியோவையும் தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணனின் மடியில் அமர்ந்து அவரிடம் உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்புகைப்படங்களில் இவர்களுடன் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, தொகுப்பாளினி ரம்யா போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.

திரிஷா தற்போது “குட் பேட் அக்லி”, “தக் லைஃப்” மற்றும் மலையாளத்தில் “ராம்”, தெலுங்கில் “விஸ்வாம்பரா” போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படங்கள் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. இது தவிர சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்திலும் திரிஷா நடித்து வருகிறார்.
