பிசியான நடிகை
நடிகை திரிஷா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். “லியோ” திரைப்படத்திற்குப் பிறகு “விடாமுயற்சி”, “தக் லைஃப்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள திரிஷா, தற்போது சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது மலையாளத்தில் “ஐடன்டிட்டி”, “ராம்” ஆகிய திரைப்படங்களிலும் தெலுங்கில் “விஸ்வாம்பரா” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தமிழில், “குட் பேட் அக்லி” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு ஒரு பிசியான நடிகையாக வலம் வருகிறார் திரிஷா.

இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம்
இந்த நிலையில் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சில மணி நேரங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது கையில் 6 விமான டிக்கெட்டுகள் இருக்கின்றன. அந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர், அதில் “5 நாட்களில் 6 விமானங்களில் பறக்க வேண்டி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்து திரிஷா நிற்க கூட நேரம் இல்லாமல் பல திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் என தெரிய வருகிறது.
