கலவையான வரவேற்பு
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளிவருகின்றன. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜூன், ரெஜினா கஸண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நல்ல வேள இப்படி சொன்னான்…
இந்த நிலையில் நேற்று சென்னை வெற்றி திரையரங்கத்தில் ரசிகர்களுடன் “விடாமுயற்சி” திரைப்படத்தை காலை காட்சி பார்த்து கண்டுகளித்தார் திரிஷா. திரைப்படம் முடிந்து அவர் கிளம்பும்போது ரசிகர் ஓருவர், “திரிஷா மேடம், உங்க ஆக்டிங் சூப்பர்” என்று சத்தமாக கூறினார். அதற்கு திரிஷா “நல்ல வேள சூப்பர்னு சொன்னான்” என சொல்லிவிட்டு சிரித்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.