கனவுக்கன்னி
90’ஸ் கிட்ஸில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் திரிஷா. இப்போது இவருக்கு வயது 41. எனினும் இளமையாக காட்சியளித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் திரிஷா. அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவின் டாப் நடிகையாகவும் தற்போது திகழ்ந்து வருகிறார்.

அஜித்குமாரின் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்துள்ள இவர், “குட் பேட் அக்லி”, “தக் லைஃப்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் திரிஷா ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிப்புக்கு டாட்டா…
அதாவது திரிஷா தான் இனி சினிமாவை விட்டு விலகுவதாக முடிவெடுத்துள்ளாராம். நடிப்புக்கு டாட்டா காண்பித்துவிட்டு இனி ஓய்வு எடுக்கப்போவதாக முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாராம் திரிஷா. ஆனால் திரிஷாவின் தாயார் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். எனினும் திரிஷா தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறதாம்.