2024 இறுதி மாதம்
2024 ஆம் ஆண்டு முடிவில் நாம் இருக்கிறோம். இந்த ஆண்டு கோலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக திகழ்ந்துள்ளது. அவர்கள் ரசித்த பல திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன. அந்த வகையில் IMDB தளம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ் சினிமாவின் டாப் 5 சிறந்த திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
1.மகாராஜா

கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “மகாராஜா” திரைப்படம் தமிழ் ரசிகர்களால் மட்டுமல்லாது உலக ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட திரைப்படமாக அமைந்தது. சமீபத்தில் சீனாவில் இத்திரைப்படம் வெளியாக அங்கும் அமோக வரவேற்பு கிடைத்தது.
2.மெய்யழகன்

கடந்த செப்டம்பர் மாதம் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகச் சிறந்த Feel Good திரைப்படம் என பெயர் வாங்கியது.
3.அமரன்

கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் முகுந்தாக சிவகார்த்திகேயன் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சாய் பல்லவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படம் இந்திய ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
4.தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் ரசிகர்காளால் அதிகளவு ரசிக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது.
5.வேட்டையன்

கடந்த அக்டோபர் மாதம் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் “ஜெய் பீம்” இயக்குனர் தா.செ.ஞானவேலின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பதாக விமர்சனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.