எம்.ஜி.ஆர் பாட்டுன்னா இவர்தான்…
எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெற்ற பெரும்பாலான பாடல்களுக்கு பின்னணி பாடியவர்தான் டி.எம்.சௌந்தரராஜன். எம்.ஜி.ஆர் திரைப்பட பாடல்களுக்கு மட்டுமல்லாது சிவாஜி கணேசன், ஜெயசங்கர், எஸ் எஸ் ராஜேந்திரன் போன்ற பல கதாநாயகர்களின் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். தனது வாழ்நாளில் 10,000க்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களை பாடியுள்ளார் டி.எம்.சௌந்தரராஜன். இவ்வாறு தமிழ் சினிமாவின் இசை உலகில் சகாப்தமாக திகழ்ந்து வரும் டி.எம்.எஸ் 2013 ஆம் ஆண்டு தனது 91 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

தினமும் இரவு பிரியாணிதான்
இந்த நிலையில் சமீபத்தில் டி.எம்.சௌந்தரராஜனின் மகளான மல்லிகா ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவர், தனது தந்தை தினமும் இரவு மட்டன் பிரியாணி சாப்பிடுவார் என்ற ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதுவும் பிலால் உணவகத்தில் தயாரிக்கப்படும் பிரியாணி அவருக்கு மிகவும் இஷ்டம் எனவும் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் சைவ உணவு பழக்கம் கொண்ட டி.எம்.எஸ், நண்பர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அசைவம் சாப்பிடத் தொடங்கினாராம். அசைவம் சாப்பிட்டால்தான் உடல் பலமாக இருக்கும் என அவரது நண்பர்கள் கூறினார்களாம். அதன் பிறகுதான் அசைவ உணவு சாப்பிடத் தொடங்கினாராம். இவ்வாறு அப்பேட்டியில் டி.எம்.எஸ்ஸின் மகள் மல்லிகா பகிர்ந்துகொண்டுள்ளார்.