அம்பிகாபதி (1937)
தியாகராஜ பாகவதர் நடிப்பில் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அம்பிகாபதி”. இதில் தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாக எம்.ஆர்.சந்தானலட்சுமி நடித்திருந்தார். இத்திரைப்படத்தை கிழக்கு இந்திய பிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.

அம்பிகாபதி (1957)
அதே போல் 1957 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் “அம்பிகாபதி” திரைப்படம் படமாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக பானுமதி நடித்திருந்தார். இத்திரைப்படத்தை ப.நீலகண்டன் இயக்க ஏ.எல்.சீனிவாசன் தயாரித்திருந்தார்.

நடிக்க மறுத்த நடிகர்…
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் 1937 ஆம் ஆண்டு வெளியான “அம்பிகாபதி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த தியாகராஜ பாகவதரை சிவாஜி கணேசன் நடிக்கும் “அம்பிகாபதி” படத்தில் சிவாஜி கணேசனுக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் பாகவதரோ தயக்கம் காட்ட, அதை புரிந்துகொண்ட ஏ.எல்.சீனிவாசன், “இந்த படத்தில் நீங்கள் நடித்தால் நீங்கள் எவ்வளவு சம்பளம் கேட்கிறீர்களோ அந்த பணத்தை நான் தருகிறேன். சிவாஜி கணேசனின் சம்பளத்தை விட அதிக சம்பளம் தருகிறேன்” என்று கூட கூறியிருக்கிறார். ஆனால் தியாகராஜ பாகவதர் அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.