இயக்குனர் விக்னேஷ் சிவன்:
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனுடையே நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

மேலும் திரைப்படங்களை இயக்கிக் கொண்டே திரைப்பட பாடல்களையும் எழுதி பிரபலமான பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார். இந்த நேரத்தில்தான் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் கதையை முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார்.
அஜித்திற்கு பிடிக்கல:

ஆனால், விக்னேஷ் சிவனின் கதையில் திருப்தி இல்லாத அஜித் அந்த படமே வேண்டாம் அந்த கதையில் நான் நடிக்க விருப்பமில்லை எனக் கூறி இயக்குனரையே தூக்கி விட்டு பின்னர் மகிழ் திருமேனி இயக்குனராக போட்டு வேறொரு கதையை தயார் செய்து தற்போது விடாமுயற்சி என்ற என்ற பெயரில் இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது .
நான் சொன்ன கதை இது தான்:
இப்படியான சமயத்தில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசும்போது நான் அஜத்திடம் சொன்ன கதை ஆவேசம் போன்ற கதைகளத்தை கொண்டது. ஒரு வேலை இந்த திரைப்படம் ஓகே ஆக இருந்தால் இது கண்டிப்பாக ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருந்திருக்கும் என விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் எனது ஆவேசமா? அதெல்லாம் அஜித்துக்கு செட்டே ஆகாது. மாஸ், கேங்ஸ்டர், இது மாதிரியான படங்கள் தான் எங்க தலைக்கு செட்டாகும். நல்ல வேலை அவர் ஓகே பண்ணல. படம் டிராபாக்கிடுச்சு என பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.