குடும்பங்களின் நாயகன்
தமிழ் சினிமாவில் ஃபேமிலி ஆடியன்ஸ்களை அதிகளவு கைக்குள் வைத்திருக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் “பிரதர்” திரைப்படத்தை தொடர்ந்து “ஜீனி”, “காதலிக்க நேரமில்லை” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

SK 25
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் ஜெயம் ரவி எப்படி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கு பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பதில் அளித்துள்ளார்.

“சுதா கொங்கர இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மைதான். அந்த அளவுக்கு மிகவும் அழகாக அந்த கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறாராம் இயக்குனர் சுதா கொங்கரா. விஜய் சேதுபதியும் மாதவனும் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் இருந்ததோ அதே அளவுக்கு இந்த கதையையும் சுதா கொங்கரா எழுதியிருக்கிறாராம். அதன் காரணமாகத்தான் ஜெயம் ரவி இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.