கந்தசாமி
சுசி கணேசன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு விக்ரம், ஷ்ரேயா ஆகியோரின் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த திரைப்படம் “கந்தசாமி”. இத்திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது.

கலைப்புலி எஸ்.தாணு
இந்த நிலையில் “கந்தசாமி” திரைப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, “கந்தசாமி படம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நீளம் வந்தது. நான் இயக்குனர் சுசி கணேசனிடம், படம் பார்க்க வருகிறவர்கள், வீட்டில் இருந்து கிளம்பி திரையரங்கத்திற்கு வந்து சேர 45 நிமிடங்கள் ஆகும், அதன் பின் படம் ஒரு 3 மணி நேரம் முடிந்து மீண்டும் வீட்டுக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகும்.

இவ்வாறு இந்த படத்திற்காக குறைந்தது 5 மணி நேரம் ஒரு ரசிகர் செலவு செய்ய வேண்டி வரும். ஆதலால் படத்தை 2 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு டிரிம் செய்துவிடு என கூறினேன். ஆனால் சுசி கணேசன் மறுத்துவிட்டார். இதனால்தான் கந்தசாமி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது” என்று கூறியுள்ளார்.