பிரபலங்களின் விவாகரத்து:
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் அடுத்தடுத்த விவாகரத்து செய்திகளை கேட்டு ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள். இப்படியான நேரத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானு தன்னுடைய கணவரை பிரிய உள்ளதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து நான் கணவர் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்து இருக்கிறேன் .
ஏ ஆர் ரஹ்மான் விவாகரத்து:
இந்த முடிவு எங்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்கு பிறகு எடுத்த முடிவாகும். நாங்கள் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் எங்களுக்கு இடையில் பதற்றம், தீர்க்க முடியாத இடைவெளி இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரி செய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சாய்ரா பானு அந்த அறிக்கையில் அறிவித்து அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார். இதனால் இவர்களின் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணமாய் அமைந்தது “இடைவெளி” தான் என்பது உறுதியாகியுள்ளது.
விவாகரத்துக்கு காரணம்:

முக்கிய காரணம் இருவருக்கும் இடையே ஆன இடைவெளி தான் என்று கூறப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரிகள் திரைப்படங்களுக்கான இசை அமைப்பது உள்ளிட்ட வேலைகளில் பிசியாக இயங்கிக் கொண்டிருப்பதால் குடும்பம் மனைவியுடன் நேரத்தை செலவிட முடியாததால் இந்த இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். அதனால் மனைவி சாய்ரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் விவாகரத்தை அறிவித்துவிட்டார் என செய்திகள் கூறுகிறது. இருந்தாலும் இது இந்திய சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.