சிக்கென்று ஆன் அஜித்
அஜித்குமார் தனது இளம் வயதில் நடிக்க வந்த புதிதில் கன்னிப்பெண்களின் இதயங்களில் கையெழுத்து போட்டவராக வலம் வந்தார். எனினும் நடுவில் அவருக்கு விபத்து ஏற்பட அவரது உடல் எடை அதிகரித்தது. இதனால் பல கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானவர் “பரமசிவன்” திரைப்படத்தில் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய Formக்கு வந்தார். ஆனால் அதன் பின் மீண்டும் அவரது உடல் எடை கூடியது. “விவேகம்” திரைப்படத்திற்காக அவர் தனது உடலை மெருகேற்றினாலும் அவரது உடல் உருவம் குறையவில்லை.

ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படி “Good Bad Ugly” திரைப்படத்திற்காக சிக்கென்று தனது உடலை குறைத்தார் அஜித்குமார். ரசிகர்கள் பலரும் இது எப்படி சாத்தியம் என வாய் பிழந்தனர். இந்த நிலையில் அஜித்குமார் உடல் எடையை குறைத்தது குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி பகிர்ந்துள்ளார்.
90 நாள்!!!
அதாவது அஜித்குமார் 90 நாட்கள் வெறும் வெந்நீரை மட்டுமே உணவாக அருந்தினாராம். சில புரத மாத்திரைகளை தவிர அவர் எந்த ஒரு ஆகாரத்தையும் உட்கொள்ளவில்லையாம். இதனால் அவரது உடல் சிக்கென்று குறைந்துவிட்டதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார்.