ஜிவி பிரகாஷ் – சைந்தவி காதல்:
தன்னுடைய மெல்லிய இசையாலும் குரலாலும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்த ஜிவி பிரகாஷ் பிரபல பாடகி ஆன சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பள்ளி பருவத்திலிருந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர்கள் சம்பந்தத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் .
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகனான ஜிவி பிரகாஷ் குழந்தை பருவத்தில் இருந்தே தன்னுடைய மாமாவான ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவில் வளர்ந்து வந்தார். அவரது இசை நுணுக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத் தெரிந்த பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.
விவாகரத்து:
இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சிறந்த ஜோடியாக ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்து எனக்கூறி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள். அதன் பிறகு இவர்கள் பிரிந்துவிட்ட நிலையில் அதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக ஜிவி பிரகாஷ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் பிரச்சனையே இருவருக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது நடிகைகளுடன் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளில் நடித்ததால் மனைவி சைந்தவிக்கு பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அதுவே சண்டையாக விவாகரத்தில் கொண்டு போய் முடித்து விட்டதாக செய்திகள் வெளியாகியது
ஹீரோயின்களோடு ஜிவி – சைந்தவி வேதனை:
இந்த நிலையில் இதுகுறித்து பேசி இருக்கும் சைந்தவி… ஜிவி பிரகாஷ் நடிக்கப் போறேன் அப்படின்னு சொன்னதும் நான் சில கண்டிஷன் எல்லாம் அவருக்கு போட்டேன். ஆனால் அவர் எதையுமே கேட்கவே இல்லை.
ஆரம்பத்துல அவருடைய ரொமான்டிக் சீன் எல்லாம் பாக்குறப்போ எனக்கு ஒரு மாதிரி நெருடலா இருந்துச்சு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அது அவர்கிட்ட நான் எத்தனையோ முறை எடுத்து சொன்னேன். ஆனால் அவர் என்னை ஒரு மனுசியாகவே என் வார்த்தைகளை மதிக்கல. அதனால அதனால் தான் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சண்டையாக மாறி விவாகரத்தில் முடிந்ததாக சைந்தவி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.