மாபெரும் வெற்றி
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கயது லோஹர் ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த “டிராகன்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது இத்திரைப்படம்.

அனுபமா கிட்ட பொய் சொல்லிட்டாங்க…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளரான அந்தணனிடம் நிருபர், “அனுபமா டிராகன் படம் சம்பந்தப்பட்ட புரொமோஷன்களில் ஏன் கலந்துகொள்ளவில்லை” என கேட்டார்.
அதற்கு அந்தணன், “அனுபமாவுக்கு படக்குழுவினர் ஒரு பொய்யான நம்பிக்கையை கொடுத்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். இன்னொரு ஹீரோயினான கயாது லோஹருக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி அனுபமாவை நடிக்க வைத்தார்கள். இது எப்போதுமே நடப்பதுதான்.

ஒரு நடிகர் அல்லது நடிகையிடம் கதை சொல்லும்போது அவர்கள்தான் முக்கியமான கதாபாத்திரம் என்பது போல்தான் கூறுவார்கள். இறுதியில் பார்த்தால் அவரை விட வேறு ஒரு கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும். படமாக வரும்போதுதான் அது தெரியவரும். அது போல் நம்பித்தான் அனுபமா இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் கயது லோஹரின் கதாபாத்திரம் அனுபமா கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையே காலி பண்ணிவிட்டது. இதை படக்குழுவினரிடம் கூறி வருத்தப்பட்டதாக கூட தகவல் வருகிறது” என்று கூறியுள்ளார்.
“டிராகன்” திரைப்படத்தில் அனுபமா கதாபாத்திரத்தை விட கயது லோஹரின் கதாபாத்திரம் அதிகளவு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.