தெறி
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் “தெறி”. இத்திரைப்படம் விஜய்யின் கெரியரில் ஒரு முக்கிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படத்தில் விஜய்யின் Power Pact-ஆன நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆக்சன் காட்சிகளில் விஜய் அமர்க்களப்படுத்தியிருந்தார். அதே போல் விஜய்யின் நடனத்தை பற்றி தனியாக கூறத்தேவையில்லை.

இவ்வாறு விஜய்யின் அதகளப்படுத்தும் நடிப்பாற்றலாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் “தெறி” திரைப்படம் ரசிகர்களின் மிக விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமைந்தது.
தெறி ரீமேக்
இதனை தொடர்ந்து “தெறி” திரைப்படத்தை இயக்குனர் அட்லீ ஹிந்தியில் “பேபி ஜான்” என்ற பெயரில் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தை காளீஸ் இயக்க வருண் தவான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் இதில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்த நிலையில் ஜாக்கி செராஃப் வில்லனாக நடித்திருந்தார். கூடுதலாக சல்மான் கான் சிறப்பு தோற்றத்திலும் தோன்றினார். ஆனால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. வசூல் ரீதியிலும் சுமாரான கலெக்சனையே இத்திரைப்படம் பெற்றது.
தோல்விக்கான காரணம்
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் “பேபி ஜான்” திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்ததற்கான காரணத்தை குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். “தெறி திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு காரணம் அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த விஜய். அவருக்கென்று தமிழ்நாட்டில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு வருண் தவானுக்கு இல்லை.

அதனால் விஜய்க்கு அத்திரைப்படத்தில் பொருந்திய பல காட்சிகள் வருண் தவானுக்கு பொருந்தவில்லை என நினைக்கிறேன். இதன் காரணமாகத்தான் பேபி ஜான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது என்னுடைய எண்ணம்” என்று கூறியுள்ளார்.