கேரளாவில் மாஸ் காட்டும் விஜய்
விஜய்க்கு தமிழ் நாட்டில் எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்தளவுக்கு கேரளாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு கேரள ரசிகர்கள் சிலை வைத்த செய்தி கூட வெளிவந்திருந்தது. தற்போது விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில் அக்கட்சிக்கு கேரளாவைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அந்தளவுக்கு கேரளாவில் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் உண்டு.

எப்படி வந்தது இந்த ரசிகர் பட்டாளம்?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம், “விஜய் மலையாளத்தில் எந்த திரைப்படத்திலும் நடித்தது இல்லை. அப்படி இருக்கையில் எப்படி கேரளாவில் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “ஜாக்கி சான் எதாவது தமிழ் படத்தில் நடித்திருக்கிறாரா என்ன? ஆனால் இன்று ஜாக்கி சானுக்கு தமிழ்நாட்டில் அதிகளவு வரவேற்பு இருக்கிறது. ஒரு நடிகருக்கு வேற்று மாநிலத்தில் அதிகளவு வரவேற்பு கிடைக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம், அவர் எந்த மொழி திரைப்படங்களில் நடிக்கிறாரோ அந்த திரைப்படங்களில் நேர்மையாக தன்னுடைய பணியை ஆற்றியதுதான்” என கூறியுள்ளார்.