புரட்சி தமிழன்
தொடக்கத்தில் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்து வந்த சத்யராஜ், ஒரு காலகட்டத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக நடித்து வந்தார். எனினும் சமீப காலங்களாக பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக “பாகுபலி” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கட்டப்பா கதாபாத்திரம் இன்றளவு பேசப்பட்டு வருகிற கதாபாத்திரமாக உள்ளது.

ஏன் ஹீரோவாக நடிப்பதில்லை…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சத்யராஜ்ஜிடம் நிருபர், “நீங்கள் ஏன் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டீர்கள்?” என கேட்டார். அதற்கு “ஹீரோவா நடிச்ச சத்யராஜ்ஜிற்கு மார்க்கெட் போய்விட்டது. அதுதான் காரணம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஹீரோவா நடிச்சி Bore அடிச்சிடுச்சு, அதனாலதான் நடிக்கவில்லை என்று காரணம் கூறுவதெல்லாம் டூப்பு” என்று சத்யராஜ் அப்பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளார்.